ஈக்குவடோர் ஜனாதிபதி தேர்தல்: GuillermoLasso வெற்றி

ஈக்குவடோர் ஜனாதிபதி தேர்தலில் Guillermo Lasso வெற்றி

by Chandrasekaram Chandravadani 12-04-2021 | 3:54 PM
Colombo (News 1st) ஈக்குவடோர் ஜனாதிபதித் தேர்தலில் குய்லியார்மோ லாஸ்ஸோ (Guillermo Lasso) வெற்றி பெற்றுள்ளார். இரண்டு கட்ட வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்ற இவர் முன்னாள் வங்கியியலாளர் ஆவார். ஈக்குவடோர் ஜனாதிபதித் தேர்தல் நேற்றைய தினம் (11) நடைபெற்று முடிந்த சில மணித்தியாலங்களின் பின்னர் பிரதான எதிர்த்தரப்பு வேட்பாளரும் வலது சாரி கொள்கை கொண்ட பொருளாதார நிபுணருமான அன்ட்ரெஸ் அரோஸ் தமது தோல்வியை ஒப்புக்கொண்டிருந்தார். ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், குலியார்மோ லாஸ்ஸோ 52.5 வீத வாக்குகளையும் அன்ட்ரெஸ் அரோஸ் 47.5 வாக்குகளையும் பெற்றுள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள குலியார்மோ லஸ்ஸோவுக்கு, எதிர்த்தரப்பு வேட்பாளர் அன்ட்ரெஸ் அரோஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 65 வயதான குலியார்மோ லஸ்ஸோ மூன்று தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்தவரென்பது குறிப்பிடத்தக்கது. இவர் எதிர்வரும் மே மாதம் 24 ஆம் திகதி ஜனாதிபதிக்குரிய கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.