கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு - பொலிஸார் எச்சரிக்கை

கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை 

by Staff Writer 11-04-2021 | 3:24 PM
Colombo (News 1st) கொள்ளைச் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நேற்றைய தினத்தில் (10) மாத்திரம் தங்கச்சங்கிலிகள் கொள்ளையிடப்பட்ட 5 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். நீர்கொழும்பு, ராகம, அவிசாவளை, திஸ்ஸமகாராம மற்றும் ஜாஎல ஆகிய பகுதிகளில் இந்த கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மோட்டார் சைக்கிளில் வருகை தந்தவர்களாலேயே தங்கச்சங்கிலிகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தாண்டு காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் போதும் வீதிகளில் பயணிக்கும் போதும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொலிஸார் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.