by Staff Writer 11-04-2021 | 5:07 PM
Colombo (News 1st) ஹம்பாந்தோட்டை காட்டு யானைகள் முகாமைத்துவ சரணாலயத்திற்கான வர்த்தமானி அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரின் அனுமதியை அடுத்து வர்த்தமானி அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரச அச்சகர் கங்கானி லியனகேவிடம் வினவிய போது, இத்தகைய ஆவணம் எதுவும் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.