வத்தளையில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

வத்தளையில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

வத்தளையில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2021 | 7:55 pm

Colombo (News 1st) வத்தளையில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 101 கிராம் ஹெரோயின் மற்றும் 113 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹெரோயின் கடத்தலினூடாக பெற்றுக்கொள்ளப்பட்ட 10 இலட்சத்து 30 ஆயிரத்து 670 ரூபா பணமும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சந்தேகநபரை வத்தளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தி, 07 நாட்கள் தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவை பெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொலிஸார், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் தொடர்ந்தும் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்