மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் 

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் 

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் 

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2021 | 2:31 pm

Colombo (News 1st) நாளைய தினம் (12) அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர, யாழ்ப்பாணம், அநுராதபுரம், குருநாகல், கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை அலுவலகங்கள் திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினத்திற்கான நேரத்தை ஒதுக்கிக் கொண்டவர்களுக்கான சேவைகள் மாத்திரம் இடம்பெறும் என போக்குவரத்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்