மியன்மார் இராணுவ ஒடுக்குமுறையில் 80 பேர் பலி

மியன்மார் இராணுவ ஒடுக்குமுறையில் 80 பேர் பலி

மியன்மார் இராணுவ ஒடுக்குமுறையில் 80 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2021 | 3:30 pm

Colombo (News 1st) மியன்மார் பாதுகாப்புப் படையினரால் 24 மணித்தியாலங்களுள் 80 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகோ (Bago) நகரில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இராணுவத்தினரால் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், துப்பாக்கி பிரயோகங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

தாக்குதல்களில் கொல்லப்பட்டோரின் சடலங்களை இராணுவத்தினர் எடுத்துச் சென்றதாகவும் இதனால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையை உறுதியாக கூற முடியாது எனவும் மியன்மார் செய்திகள் தெரிவிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்