சந்தைகளில் ஆரோக்கியமற்ற தேங்காய் எண்ணெய் கண்டறியப்படவில்லை 

சந்தைகளில் ஆரோக்கியமற்ற தேங்காய் எண்ணெய் கண்டறியப்படவில்லை 

சந்தைகளில் ஆரோக்கியமற்ற தேங்காய் எண்ணெய் கண்டறியப்படவில்லை 

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2021 | 2:59 pm

Colombo (News 1st) ஆரோக்கியமற்ற தேங்காய் எண்ணெய் சந்தைகளில் இதுவரை கண்டறியப்படவில்லை என சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பெற்றுக் கொள்ளப்பட்ட 109 தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் பரிசோதனைகளில், மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனப் பதார்த்தம் உள்ளடங்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் சந்தைகளிலுள்ள தேங்காய் எண்ணெயை அச்சமின்றி பயன்படுத்துமாறும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்