கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் பாகுபாடு - WHO

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் பாகுபாடு - உலக சுகாதார ஸ்தாபனம் விமர்சனம்

by Staff Writer 10-04-2021 | 5:42 PM
Colombo (News 1st) கொரோனா தடுப்பூசிகளை வறிய மற்றும் செல்வந்த நாடுகளுக்கு விநியோகிப்பதில், அதிர்ச்சியளிக்கும் வகையில் பாகுபாடு காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் விமர்சித்துள்ளது. கூடிய வருமானம் பெறுவோர் வாழும் நாடுகளில் நான்கில் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி கிடைப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், குறைந்த வருமானம் பெறுவோர் வாழும் நாடுகளில் ஐநூறுக்கும் அதிகமானோரில் ஒருவருக்கு தடுப்பூசி கிடைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வறிய நாடுகளுக்கு கொவெக்ஸ் திட்டத்தின் கீழ், நியாயமான வகையில் கொரோனா தடுப்பூசிகளை விநியோகிக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் நூறு நாடுகளுக்கு 38 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன.