யாழ். மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைது

யாழ். மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைது

by Staff Writer 09-04-2021 | 11:15 AM
Colombo (News 1st) யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். யாழ். மாநகர சபையை தூய்மையாக பேணுவதற்காக  கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஊழியர்களின் சீருடை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரிலே​யே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சீருடை விடுதலைப்புலிகளின் காவல் துறையினரின் சீருடையை ஒத்தது என தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். குறித்த ஊழியர்கள், யாழ். மாநகர மேயரால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், சீருடையும் அவரின் பணிப்புரையின் பேரில் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். இதற்கமைய, யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். அதன் பின்னர் அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.