எதிர்வரும் 12 ஆம் திகதி விசேட பொது விடுமுறை

எதிர்வரும் 12 ஆம் திகதி விசேட பொது விடுமுறை அறிவிப்பு

by Bella Dalima 09-04-2021 | 6:57 PM
Colombo (News 1st) எதிர்வரும் 12 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் - சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு இந்த விசேட பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்தார். ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த விசேட பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.