இன்று (09) முதல் விசேட போக்குவரத்து சேவை

இன்று (09) முதல் விசேட போக்குவரத்து சேவை

by Staff Writer 09-04-2021 | 3:46 PM
Colombo (News 1st) தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு செல்வோருக்காக இன்று (09) முதல் விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பயணிகளின் நன்மையை கருத்திற்கொண்டு இன்று முதல் 21 நெடுந்தூர ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டார். இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையும் விசேட போக்குவரத்து சேவைகளை முன்னெடுத்துள்ளது. தூர பிரதேசங்களுக்காக மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் அதிவேக வீதிகளில் பயணிக்கும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.