பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் காலமானார்

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் காலமானார்

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் காலமானார்

எழுத்தாளர் Bella Dalima

09 Apr, 2021 | 5:03 pm

Colombo (News 1st) பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் தனது 99 ஆவது வயதில் காலமானார்.

எடின்பரோ கோமகன் பிலிப் இன்று காலை காலமானதாக எலிசபெத் மகாராணி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதய பிரச்சினை காரணமாக சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளவரசர் பிலிப் அண்மையில் வீடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

இளவரசர் இன்று காலை வின்சர் கோட்டையில் அமைதியான முறையில் உயிரிழந்ததாக பக்கிங்காம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1947ஆம் ஆண்டில் இளவரசி எலிசபெத் அரசியாவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அவரை இளவரசர் திருமணம் செய்து கொண்டார்.

இளவரசர் பிலிப் பிரிட்டிஷ் அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் சேவையாற்றியவர்.

இளவரசர் பிலிப், கிரேக்க தீவான கோர்ஃபுவில் 1921ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் திகதி பிறந்தார். 1947 ஆம் ஆண்டு ராணி இரண்டாம் எலிசபெத்தை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கும் மகாராணிக்கும் நான்கு பிள்ளைகள், 8 பேரக்குழந்தைகள், 10 கொள்ளுப்பேரப்பிள்ளைகள் உள்ளனர்.

இரண்டு தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இளவரசர் பிலிப் இறுதியாக 1981 ஆம் ஆண்டு விக்டோரியா நீர்த்தேக்கத்தை திறந்து வைப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்