பக்கசார்பின்றி செயற்படுமாறு எதிர்க்கட்சியினர் சபாநாயகருக்கு கடிதம்

பக்கசார்பின்றி செயற்படுமாறு எதிர்க்கட்சியினர் சபாநாயகருக்கு கடிதம்

பக்கசார்பின்றி செயற்படுமாறு எதிர்க்கட்சியினர் சபாநாயகருக்கு கடிதம்

எழுத்தாளர் Staff Writer

09 Apr, 2021 | 8:23 pm

Colombo (News 1st) பக்கசார்பின்றி செயற்படுமாறு எதிர்க்கட்சியின் 39 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சபாநாயகருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

சபாநாயகர் பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் பக்கசார்பாக செயற்படுகின்றமை தெரியவருவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் கொண்டு வரும் சில பிரேரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த சந்தர்ப்பங்களில் சபாநாயகர், வேண்டுமென்றே எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கருத்திற்கொள்ளாமல் செயற்பட்ட பல சந்தர்ப்பங்களை காண முடிந்ததாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனி இறக்குமதியின் போதான வரிக் கொள்கையை திருத்தியமைக்கும் போது கொண்டுவரப்பட்ட பிரேரணையின் போது, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வாக்கெடுப்பைக் கோரிய போதிலும், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லையெனவும், பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றத்திற்கு வருவதற்கு சந்தர்ப்பம் வழங்கிய போதிலும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அந்த சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையெனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் வரலாற்றில் ஒருபோதும் இடம்பெறவில்லையெனவும் அது பாராளுமன்றத்தின் கௌரவத்திற்கு பங்கம் விளைவிப்பதாக அமையுமா என்ற சந்தேகம் எழுவதாகவும் எதிர்க்கட்சியின் 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்