அஜித் மான்னப்பெரும பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

அஜித் மான்னப்பெரும பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

அஜித் மான்னப்பெரும பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Staff Writer

09 Apr, 2021 | 3:08 pm

Colombo (News 1st) அஜித் மான்னப்பெரும பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதால், தகுதியானவரை பெயிரிடுமாறு கம்பஹா மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலின் பெறுபேறுகளின் பிரகாரம், ஐக்கிய மக்கள் சக்தியில் கம்பஹா மாவட்டத்தில் விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்ட வேட்பாளர்களில் அஜித் மான்னப்பெரும முன்னிலையில் உள்ளார்.

அதற்கமைய, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவால் வௌியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம், அஜித் மான்னப்பெரும பாராளுமன்ற உறுப்பினராக இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்