3 கொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்

3 கொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 08-04-2021 | 9:21 AM
Colombo (News 1st) நேற்றைய தினம் (07) 3 கொரோனா மரணங்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. அதனடிப்படையில், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 591 ஆக அதிகரித்துள்ளது. ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 89 வயதான ஆண் ஒருவர், முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (06) உயிரிழந்துள்ளார். தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான ஆண் ஒருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (06) மரணமடைந்துள்ளார். ஹெட்டிபொலை பகுதியை சேர்ந்த 60 வயதான பெண் ஒருவர், பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 3ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.