டெக்சஸில் இரசாயன சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

டெக்சஸில் உள்ள இரசாயன சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

by Bella Dalima 08-04-2021 | 4:48 PM
Colombo (News 1st) அமெரிக்காவின் டெக்சஸ் (Texas) மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் உள்ள சேனல்வியூ (Channelview) பகுதியில் இரசாயன சேமிப்புக் கிடங்கு ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு 7 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் அங்கு பல கிலோமீட்டர் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்துள்ளது. சேமிப்புக்கிடங்கில் இரசாயனத்தை ஒரு கொள்கலனில் இருந்து மற்றொரு கொள்கலனுக்கு மாற்றும்போது இந்த தீ விபத்து ஏற்பட்டதாக K-Solv எனும் குறித்த இரசாயன விநியோக நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த சில மணி நேரங்களாக பரவி வரும் தீயினை அணைக்க தீயணைப்புப்படை வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.