வெற்றிடமான ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர் யார்?

வெற்றிடமான ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர் யார்?

வெற்றிடமான ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர் யார்?

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2021 | 9:57 am

Colombo (News 1st) ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதானதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு தகுதியானவர்களை பெயரிடுமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, கம்பஹா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிக்கு அறிவித்துள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க, கம்பஹா மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் விருப்பு வாக்குப் பட்டியலில் அடுத்த இடத்திலுள்ளவரின் பெயர் கம்பஹா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியினால் பெயரிடப்பட்டுள்ளது.

குறித்த பெயர் அடுத்த இரண்டு நாட்களில் வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தல் முடிவுகளுக்கு அமைய, ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகாத வேட்பாளர்களின் பட்டியலில் அஜித் மான்னப்பெரும முன்னிலையில் உள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்