யாழில் இன்று 129 பேருக்கு COVID-19 தொற்று உறுதி

யாழில் இன்று 129 பேருக்கு COVID-19 தொற்று உறுதி

யாழில் இன்று 129 பேருக்கு COVID-19 தொற்று உறுதி

எழுத்தாளர் Bella Dalima

08 Apr, 2021 | 5:58 pm

Colombo (News 1st) யாழ். மாவட்டத்தில் இன்று 129 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

கடந்த ஒக்டோபர் மாதத்தின் பின்னர் தற்போது வரை 992 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கணபதிப்பிள்ளை மகேசன் குறிப்பிட்டார்.

இந்நிலையில், நகரப் பகுதியிலுள்ள 70 கடைத் தொகுதிகளைத் தவிர ஏனைய கடைகளைத் திறப்பதற்கான அனுமதியை சுகாதாரப் பிரிவினர் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில், யாழ். நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

பஜார் வீதி, கஸ்தூரியார் வீதியில் ஒரு பகுதி, மின்சார நிலைய வீதி, வைத்தியசாலை வீதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்