ரஞ்சன் தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்பு

ரஞ்சன் தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு; சபை நடவடிக்கை ஒத்திவைப்பு 

by Staff Writer 08-04-2021 | 10:52 AM
Colombo (News 1st) எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பினால் பாராளுமன்ற சபை நடவடிக்கை 05 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பான சபாநாயகரின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சியினர் கறுப்பு பட்டியணிந்து சபைக்குள் பிரசன்னமாகினர். சபாநாயகரின் தீர்மானம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சபை அமர்வு ஆரம்பத்தில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சபையில் உரையாற்றிய போது கடும் வாதப் பிரதிவாதம் ஏற்பட்டது. இதனையடுத்தே சபை நடவடிக்கை சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.    

ஏனைய செய்திகள்