டெக்சஸில் உள்ள இரசாயன சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

டெக்சஸில் உள்ள இரசாயன சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

டெக்சஸில் உள்ள இரசாயன சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

எழுத்தாளர் Bella Dalima

08 Apr, 2021 | 4:48 pm

Colombo (News 1st) அமெரிக்காவின் டெக்சஸ் (Texas) மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் உள்ள சேனல்வியூ (Channelview) பகுதியில் இரசாயன சேமிப்புக் கிடங்கு ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு 7 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் அங்கு பல கிலோமீட்டர் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்துள்ளது.

சேமிப்புக்கிடங்கில் இரசாயனத்தை ஒரு கொள்கலனில் இருந்து மற்றொரு கொள்கலனுக்கு மாற்றும்போது இந்த தீ விபத்து ஏற்பட்டதாக K-Solv எனும் குறித்த இரசாயன விநியோக நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மணி நேரங்களாக பரவி வரும் தீயினை அணைக்க தீயணைப்புப்படை வீரர்கள் போராடி வருகின்றனர்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்