வைத்தியசாலை கனிஷ்ட ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் வைத்தியசாலைகளின் கனிஷ்ட ஊழியர்கள்

by Staff Writer 07-04-2021 | 7:38 AM
Colombo (News 1st) வைத்தியசாலைகளின் கனிஷ்ட ஊழியர்கள் இன்று (07) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 11 கோரிக்கைகளை முன்வைத்து இன்று தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் டெம்பிடியே சுகதாநந்த தேரர் தெரிவித்துள்ளார். தமது கோரிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சுடன் 3 தடவைகள் பேச்சுவார்த்தை நடைபெற்றதுடன், நிதி அமைச்சிற்கு சென்று மகஜர் ஒன்றை கையளித்த போதிலும் தீர்வு எட்டப்படவில்லை என அவர் கூறினார். இதற்கு முன்னர் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்த போதிலும் அரசாங்கம் எவ்வித பதிலையும் வழங்காத காரணத்தினாலேயே, இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்ததாக டெம்பிடியே சுகதாநந்த தேரர் குறிப்பிட்டுள்ளார். கனிஷ்ட ஊழியர்களாக வாரத்திற்கு 48 மணித்தியாலங்கள் பணியாற்றுவதாகவும் வார இறுதி நாட்களில் சேவைக்கு சமூகமளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதனால் மேலதிகமாக பணியாற்றும் நாட்களுக்கான கொடுப்பனவை வழங்குதல் உள்ளிட்ட 11 காரணிகளை முன்வைத்தே தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் டெம்பிடியே சுகதாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.