யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று 

யாழ். நகரில் புதிய சந்தை கட்டட தொகுதியில் பணிபுரியும் 54 பேருக்கு கொரோனா

by Staff Writer 07-04-2021 | 3:04 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் நகரிலுள்ள புதிய சந்தை கட்டட தொகுதியில் பணிபுரியும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் குறிப்பிட்டார். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை தடுமைப்படுத்தி, அவர்களுக்கும் PCR சோதனை மேற்கொள்ளவுள்ளதாக அவர் கூறினார். கடந்த திங்கட்கிழமை (05) பெறப்பட்ட 464 மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையினூடாக இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்