பாகிஸ்தான், சாட் கால்பந்தாட்ட சம்மேளனங்களுக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் தடை

பாகிஸ்தான், சாட் கால்பந்தாட்ட சம்மேளனங்களுக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் தடை

பாகிஸ்தான், சாட் கால்பந்தாட்ட சம்மேளனங்களுக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் தடை

எழுத்தாளர் Bella Dalima

07 Apr, 2021 | 5:40 pm

Colombo (News 1st) பாகிஸ்தான் மற்றும் சாட் (Chad) குடியரசு கால்பந்தாட்ட சம்மேளனங்களுக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் தடை விதித்துள்ளது.

குறித்த நாடுகளின் கால்பந்தாட்ட சம்மேளனங்களில் காணப்படும் மூன்றாம் தரப்பினரின் தலையீட்டைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாட் குடியரசின் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் தலையீடு காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நியமிக்கப்பட்ட குழுவொன்றின் உறுப்பினர்களை உள்நாட்டில் சில தரப்பினர் நீக்கியதைத் தொடர்ந்து லாகூரில் உள்ள பாகிஸ்தான் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைமையகத்தில் எழுந்த எதிர்ப்பின் பின்னணியில் பாகிஸ்தான் கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் தடை விதித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்