சலுகை முறையில் பொருட்களை விற்கும் வர்த்தகர்

சலுகை முறையில் பொருட்களை விற்கும் வர்த்தகர்

சலுகை முறையில் பொருட்களை விற்கும் வர்த்தகர்

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2021 | 2:30 pm

Colombo (News 1st) சித்திரைப் புதுவருட காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் 1,000 ரூபா சலுகை பொதியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அந்த பொருட்களை 1,000 ரூபாவை விட குறைந்த விலைக்கு வழங்க முடியும் என்பதை பண்டாரவளையில் ஒருவர் நிரூபிக்கும் வகையில் பொருட்களை விற்பனை செய்து வருகின்றார்.

பண்டாரவளை பிரதேசத்தில் சில்லரை விற்பனை நிலையம் ஒன்றில் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற மானிய பொதியில் உள்ள பொருட்களுடன் மேலும் சில பொருட்களையும் உள்ளடக்கி 1,000 ரூபாவை விட குறைந்த விலைக்கு இவர் விற்பனை செய்வதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார்.

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இந்த சலுகையை தாம் வழங்கியுள்ளதாக இந்த வர்த்தகர் கூறுகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்