ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2021 | 7:46 pm

Colombo (News 1st) சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் இன்று சுகயீன விடுமுறையில் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

மேலதிக கொடுப்பனவை வழங்குமாறும் வைத்தியசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை உரிய முறையில் நிரப்புமாறும் இன்னும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகில் இருந்து பேரணியாக சென்ற இவர்கள் ஜனாதிபதி செயலக வளாகத்தை அடைந்தனர்.

ஜனாதிபதியின் செயலாளர் ஒருவருடன் கலந்துரையாடுவதற்கு அவர்கள் சந்தர்ப்பம் கோரிய போதிலும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

பின்னர், அவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலையும் வீதியையும் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தின் போராட்டம் தீர்வின்றி நிறைவிற்கு வந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்