விரைவில் பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுமதி

மேல் மாகாணத்தில் 12 ஆம் திகதியின் பின்னர் பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுமதி

by Staff Writer 06-04-2021 | 7:31 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதியின் பின்னர் பிரத்தியேக வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்படுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். இதற்கான சுகாதார வழிகாட்டல், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். மேல் மாகாணத்தில் பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிக்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பரிந்துரைக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். அதற்கமைய, மார்ச் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமையால், எதிர்வரும் 12 ஆம் திகதி தொடக்கம் பிரத்தியேக வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறினார்.