6 M 'Sputnik V' தடுப்பூசி கொள்வனவிற்கு அனுமதி

மேலும் 6 மில்லியன் 'Sputnik V' தடுப்பூசி கொள்வனவிற்கு அனுமதி 

by Staff Writer 06-04-2021 | 11:24 AM
Colombo (News 1st) மேலும் 06 மில்லியன் 'ஸ்புட்னிக் V' ('Sputnik V') தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சுகாதார அமைச்சரினால் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கமைய, ஏற்கனவே முற்பதிவு செய்யப்பட்டுள்ள 07 இலட்சம் தடுப்பூசிகளுக்கு மேலதிகமாக 06 இலட்சம் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. ஒரு தடுப்பூசி 9.95 அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது.