by Staff Writer 06-04-2021 | 8:45 AM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (06) கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்ட போது, கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் எவ்வித தயார்ப்படுத்தல்களுடனும் வருகை தராமையினால் கூட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டது.
இதன் காரணமாக மீண்டும் தம் முன் ஆஜராகுமாறு கோப் குழுவினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் தலைமையிலான கோப் குழு, இம்மாதம் 04 அரச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.