சைக்கிளில் சென்று வாக்களித்தது ஏன்: விஜய் தரப்பு விளக்கம் 

சைக்கிளில் சென்று வாக்களித்தது ஏன்: விஜய் தரப்பு விளக்கம் 

சைக்கிளில் சென்று வாக்களித்தது ஏன்: விஜய் தரப்பு விளக்கம் 

எழுத்தாளர் Bella Dalima

06 Apr, 2021 | 3:36 pm

Colombo (News 1st) தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (06) நடைபெற்று வருகிறது. அரசியல் மற்றும் திரைப் பிரபலங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், சூர்யா, சிவகுமார், கார்த்தி ஆகியோர் வாக்குகளை செலுத்திய புகைப்படங்கள் வௌியாகியுள்ளன.

இந்நிலையில், நடிகர் விஜய் நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வாக்களிக்கச் சென்றிருந்தமை அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜய் வாக்களிக்க சைக்கிளில் சென்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது.

பெட்ரோல் விலை உயர்வை சுட்டிக்காட்டும் விதத்தில் தான் அவர் சைக்கிளில் சென்று தனது வாக்கினை செலுத்தினார் என்று விஜய்யின் நடவடிக்கை குறித்து பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்தார்கள்.

இந்நிலையில், சைக்கிளில் வந்து வாக்களித்தது குறித்து விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி உள்ள பகுதியில் கார் செல்ல முடியாது என்பதாலும் வாக்குச்சாவடி வீட்டிற்கு அருகே உள்ளதாலும் நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்