இலங்கை கட்டளைகள் நிறுவன வளாகத்தில் அமைதியின்மை

இலங்கை கட்டளைகள் நிறுவன வளாகத்தில் அமைதியின்மை

இலங்கை கட்டளைகள் நிறுவன வளாகத்தில் அமைதியின்மை

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2021 | 8:11 pm

Colombo (News 1st) இலங்கை கட்டளைகள் நிறுவன வளாகத்தில் இன்று அமைதியின்மை ஏற்பட்டது.

நேற்றைய உறுதிமொழிக்கு அமைய, நச்சு இரசாயனப் பொருட்கள் அடங்கிய உற்பத்திகள் தொடர்பில் கட்டளைகள் நிறுவனம் இன்று தகவல்களை வழங்காமையினாலேயே அமைதியின்மை ஏற்பட்டது.

நேற்று (05) உறுதி வழங்கியதைப் போன்று நச்சு இரசாயனப் பொருட்கள் அடங்கிய உற்பத்திகள் என்னவென்பதை அறியும் நோக்கில் சிங்களே அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்கு இன்று சென்றிருந்தனர்.

விஷம் அடங்கிய உணவுப் பொருட்களின் பட்டியலை இன்று வழங்குவதாக இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் இதற்கு முன்னர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

சிங்களே அமைப்பின் உறுப்பினர்கள் அவ்விடத்திற்கு இன்று சென்ற போதிலும், வளாகத்திற்குள் பிரவேசிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

பின்னர் பொலிஸார் தலையிட்டு மெடில்லே பஞ்ஞாலோக்க தேரருக்கு இலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்குள் செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கிய போதிலும், குறித்த உற்பத்தி பட்டியல் வழங்கப்படவில்லை.

இதனிடையே, சிங்கள ராவய அமைப்பு, இலங்கை கட்டளைகள் நிறுவன பணிப்பாளர் நாயகம் மற்றும் அதன் ஊழியர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்தது.

சோசலிச இளையோர் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தர நிர்ணய சபை உள்ளிட்ட 8 நிறுவனங்களுக்கு எதிராக இன்று முறைப்பாடு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்