பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் நல்லடக்கம் 

பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் நல்லடக்கம் 

பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் நல்லடக்கம் 

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2021 | 6:56 pm

Colombo (News 1st) மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் பேரருட்திரு கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று (05) நல்லடக்கம் செய்யப்பட்டது.

இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று பிற்பகல் வரை இறுதி அஞ்சலிக்காக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் வைக்கப்பட்டிருந்தது.

ஆயரின் திருவுடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.

சமயத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், படையினர், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கொழும்பு பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, பாப்பரசரின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி, இலங்கை ஆயர்மன்ற தலைவர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி, கொழும்பு பேராயர் மற்றும் பிரதமர் ஆகியோரின் இரங்கல் செய்திகள் இதன்போது வாசிக்கப்பட்டன.

இதனையடுத்து, ஆயரின் திருவுடல் பேராலயத்திற்குள் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

இதேவேளை, மன்னார் நகர்ப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆயரின் திருவுருவச்சிலை இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் பேரருட்திரு கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகை தனது 81ஆவது வயதில் கடந்த முதலாம் திகதி நித்திய இளைப்பாறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்