by Staff Writer 05-04-2021 | 5:46 PM
Colombo (News 1st) உடன் அமுலாகும் வகையில் பாம் எண்ணெய் (Palm Oil) இறக்குமதிக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானியை இன்றிரவு (05) வௌியிடுமாறு ஜனாதிபதியின் செயலாளரால் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள பாம் எண்ணெய் கொள்கலன்களை விடுவிக்க வேண்டாம் என சுங்க பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.