இந்தோனேஷியாவில் மண்சரிவு, வௌ்ளத்தில் சிக்கி 101 பேர் உயிரிழப்பு

இந்தோனேஷியாவில் மண்சரிவு, வௌ்ளத்தில் சிக்கி 101 பேர் உயிரிழப்பு

இந்தோனேஷியாவில் மண்சரிவு, வௌ்ளத்தில் சிக்கி 101 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2021 | 4:51 pm

Colombo (News 1st) இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வௌ்ளத்தில் சிக்கி குறைந்தது 101 பேர் உயிரிழந்துள்ளனர்.

மண்சரிவினால் Flores தீவு மற்றும் அதன் அருகிலுள்ள Timor Leste பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாமென அச்சம் வௌியிடப்பட்டுள்ளது.

மண்சரிவினால் Flores தீவில் 41 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன்
27 பேர் காணாமற் போயுள்ளனர்.

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடா இரங்கல் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்