13320 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை

விதிமுறைகளை மீறிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக நடவடிக்கை 

by Staff Writer 04-04-2021 | 5:02 PM
Colombo (News 1st) போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 13,320 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 72 மணித்தியாலங்களில் விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது வீதியில் செலுத்துவதற்கு பொருத்தமற்ற 450 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இதனை தவிர மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய 398 பேரும் சுற்றிவளைப்பின் போது அடையாளங் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தவிர அதிக வேகம், மூன்று பேர் பயணித்தமை, சாரதி அனுமதிப்பத்திர விதிகளை மீறியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.