மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

அக்கரப்பத்தனையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 04-04-2021 | 5:34 PM
Colombo (News 1st) அக்கரப்பத்தனை - ஹோல்புறூக் பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீடு கட்டும் பணிகளில் ஈடுபட்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மேலும் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார். அனர்த்தத்தில் பெல்மோரல் தோட்டத்தைச் சேர்ந்த 43 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். சடலம் அக்கரப்பத்தனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.