by Staff Writer 03-04-2021 | 7:51 PM
Colombo (News 1st) மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் கலாநிதி பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடலுக்கு பெருமளவிலான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஆயரின் திருவுடல் மன்னார் ஆயர் இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் திருவுடலுக்கு சமயத்தலைவர்களும் அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஆயரின் திருவுடல் நாளை (04) பிற்பகல் 2 மணி வரை மன்னார் ஆயர் இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
நாளை பிற்பகல் 2 மணிக்கு ஆயர் இல்லத்திலிருந்து மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
நாளை (04) தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை 2 மணி வரை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் ஆயரின் திருவுடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து 3 மணியளவில் பேராலயத்திற்கு அருகில் இருக்கும் சாலையில் அனைத்திலங்கை ஆயர்களின் கூட்டு திருப்பலியுடன் ஆயரின் திருவுடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் கலாநிதி பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை தனது 81 ஆவது வயதில் நேற்று முன்தினம் நித்திய இளைப்பாறினார்.