அமெரிக்க கெப்பிட்டல் கட்டடத்தில் கத்திக்குத்து தாக்குதல்: பொலிஸ் அதிகாரி பலி

அமெரிக்க கெப்பிட்டல் கட்டடத்தில் கத்திக்குத்து தாக்குதல்: பொலிஸ் அதிகாரி பலி

அமெரிக்க கெப்பிட்டல் கட்டடத்தில் கத்திக்குத்து தாக்குதல்: பொலிஸ் அதிகாரி பலி

எழுத்தாளர் Bella Dalima

03 Apr, 2021 | 5:33 pm

Colombo (News 1st) அமெரிக்க நாடாளுமன்றம் இருக்கும் கெப்பிட்டல் கட்டடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

வாஷிங்டன் DC-யில் இருக்கும் குறித்த கட்டடத்தின் பாதுகாப்பு தடுப்புகளை மோதிக்கொண்டு ஒரு கார் உள்ளே சென்றுள்ளது. அதிலிருந்த ஓட்டுநர் அங்கிருந்த பொலிஸ் அதிகாரி மீது கத்தியோடு பாய்ந்துள்ளார்.

இதன்போது, பொலிஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டதில் அந்த நபர் உயிரிழந்துள்ளார். எனினும், தாக்குதலுக்குள்ளான பொலிஸ் அதிகாரியும் உயிரிழந்துள்ளார்.

இந்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையது அல்லவென வாஷிங்டன் பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பை கருத்திற்கொண்டு கெப்பிட்டல் கட்டடம் முடக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் உயிரிழந்த அதிகாரியின் குடும்பத்தினருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் அவரது பாரியார் ஜில் பைடனும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்ட நபர் இந்தியானா மாகாணத்தைச் சேர்ந்த நோவா கிரீன் (25 வயது) என்று புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்