சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு சலுகைக் காலம்

காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு சலுகைக் காலம் அறிவிப்பு

by Staff Writer 02-04-2021 | 4:07 PM
Colombo (News 1st) காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் செப்டம்பர் 31 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான காலாவதி திகதி 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதி ஆகும் தினத்திலிருந்து 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் வகையில், போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகேவினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் 17 ஆம் திகதி செல்லுபடியாகும் கால எல்லை தளர்த்தப்பட்ட சாரதிகளின் அனுமதிப்பத்திரத்திற்கு புதிய வர்த்தமானி அறிவித்தல் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.