அரிசியை பாதுகாப்பாக களஞ்சியப்படுத்த நடவடிக்கை

அரிசியை பாதுகாப்பாக களஞ்சியப்படுத்த வர்த்தக அமைச்சு நடவடிக்கை

by Staff Writer 02-04-2021 | 3:29 PM
Colombo (News 1st) 8000 மெட்ரிக் தொன் அரிசியை பாதுகாப்பாக களஞ்சியப்படுத்துவதற்கான தரவுகளை சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான அரிசியை நிர்ணய விலையில் கொள்வனவு செய்ய உள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன குறிப்பிட்டார். 25,000 மெட்ரிக் தொன் நாட்டரிசியையும் சம்பா அரிசியையும் பாதுகாக்கும் செயற்றிட்டத்தின் முதல் கட்டமாக 8000 மெட்ரிக் தொன் அரிசி பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார். இம்முறை பெரும்போக அறுவடையில் 32 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி கிடைத்துள்ளதாக பத்ராணி ஜயவர்தன தெரிவித்தார். சிறுபோகத்தில் 15 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி அறுவடையை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். அதற்கமைய, நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன சுட்டிக்காட்டினார்.