வெலிகம பல்நோக்கு கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பருப்பில் புற்றுநோயை உண்டாக்கும் Aflatoxin

வெலிகம பல்நோக்கு கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பருப்பில் புற்றுநோயை உண்டாக்கும் Aflatoxin

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2021 | 3:21 pm

Colombo (News 1st) வெலிகம பல்நோக்கு கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட பருப்பில் Aflatoxin இரசாயனம் அடங்கிய புற்றுநோய்க் காரணி கண்டறியப்பட்டுள்ளது.

அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையினூடாக இதனை உறுதி செய்ததாக வெலிகம பிராந்திய பிரதம பொது சுகாதார பரிசோதகர் M.M.H.நிஹால் குறிப்பிட்டார்.

குறித்த பல்நோக்கு கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்திலிருந்து காலாவதியான, நுகர்விற்கு பொருந்தாத 3150 கிலோகிராம் பருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

காலாவதியான யோகட் விற்பனை செய்யப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, இந்த விற்பனை நிலையத்தில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேங்காய் எண்ணெயில் Aflatoxin கலந்திருப்பது கண்டறியப்பட்டு, அது குறித்தான சோதனைகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், புற்றுநோயை உண்டாக்கும் Aflatoxin பருப்பிலும் கலந்திருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு இது சுகாதார பாதிப்பை ஏற்படுத்தும் என பிரதம பொது சுகாதார பரிசோதகர் M.M.H.நிஹால் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்