ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சோபித ராஜகருணா நியமனம்

விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு நீதிபதி சோபித ராஜகருணா நியமனம்

by Staff Writer 02-04-2021 | 3:38 PM
Colombo (News 1st) அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரத்னபிரிய குருசிங்கவிற்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானிக்கு அமைய, மூன்று பேர் அடங்கிய விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில் ஆராய்ந்து ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கவே இந்த புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்