தைவானில் ரயில் தடம்புரண்டதால் 36 பேர் உயிரிழப்பு

தைவானில் ரயில் தடம்புரண்டதால் 36 பேர் உயிரிழப்பு

தைவானில் ரயில் தடம்புரண்டதால் 36 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Apr, 2021 | 5:49 pm

Colombo (News 1st) தைவானில் சரியாக நிறுத்தி வைக்கப்பட்டிராத லொறி ஒன்று ரயில் தண்டவாளத்தில் சரிந்ததால், அதன் மீது மோதிய ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்துள்ளதுடன், 72 பேர் காயமடைந்துள்ளனர்.

தைவானின் தாய்டங் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், ஹூவாலியன் அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையை நெருங்கியபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

திடீரென தடம்புரண்ட ரயில், சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவரில் மோதியபடி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நின்றுள்ளது.
இதனால் ரயில் பெட்டிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், பயணிகள் கடும் காயங்களுக்கு உள்ளாகினர்.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

ரயிலுக்குள் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்