ஹக்கலயில் விபத்து; மூவர் பலி

ஹக்கலயில் விபத்து; மூவர் பலி

எழுத்தாளர் Staff Writer

01 Apr, 2021 | 3:09 pm

Colombo (News 1st) நுவரெலியா – ஹக்கல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, பின்னால் பயணித்த லொறியுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

லொறி சாரதியின் தவறு காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

விபத்தில் 20, 50, 51 வயதுடைய 3 பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், முச்சக்கரவண்டியின் சாரதி பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்