by Staff Writer 01-04-2021 | 2:58 PM
Colombo (News 1st) மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை தனது 81 ஆவது வயதில் இறைபதம் எய்தினார்.
யாழ். திருச்சிலுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் நித்திய இளைப்பாறினார்.
1992 ஆம் ஆண்டு முதல் மன்னார் மறைமாவட்ட இரண்டாம் ஆயராக பதவி வகித்து 2015 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
பேரருட்திரு கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகை மன்னார் மறைமாவட்டத்திற்காக அளப்பரிய சேவையாற்றியதாக
மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.