ஊடகவியலாளர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்: அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிக்கை

ஊடகவியலாளர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்: அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிக்கை

ஊடகவியலாளர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்: அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிக்கை

எழுத்தாளர் Staff Writer

01 Apr, 2021 | 8:17 pm

Colombo (News 1st) இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் சில அதிகாரிகள் அரச வாகனங்களை பயன்படுத்தி தம்மை கண்காணித்து வருவதாக ஊடகவியலாளர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் யுத்த காலத்தில் காணாமற்போனவர்கள் தொடர்பில் அறிக்கையிடும் போது, சில ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு பிரிவினரின் அழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்க வேண்டி ஏற்படுவதாகவும் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்