உடைக்கப்பட்ட வீட்டின் இடிபாடுகளுக்குள் இருந்து ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றல்

உடைக்கப்பட்ட வீட்டின் இடிபாடுகளுக்குள் இருந்து ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றல்

உடைக்கப்பட்ட வீட்டின் இடிபாடுகளுக்குள் இருந்து ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றல்

எழுத்தாளர் Staff Writer

01 Apr, 2021 | 3:34 pm

Colombo (News 1st) மருதானையில் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

உடைக்கப்பட்ட வீடொன்றின் இடிபாடுகளுக்குள் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு மற்றும் கொழும்பு மத்திய பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய இன்று அதிகாலை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஒரு கிலோ 78 கிராம் ஹெரோயின் இதன்போது கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளங்காணப்படவில்லை.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் மேலதிக நடவடிக்கைகளுக்காக மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்