2000 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

அதிக விலையில் அரிசி விற்பனை: 2000 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

by Bella Dalima 31-03-2021 | 4:34 PM
Colombo (News 1st) நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்த 2000 வர்த்தகர்களுக்கு எதிராக வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இந்த விடயம் தொடர்பில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணை பிரிவு குறிப்பிட்டுள்ளது. சிவப்பு மற்றும் வௌ்ளை பச்சை அரிசி ஒரு கிலோ 93 ரூபாவாகவும் நாட்டரிசி ஒரு கிலோ 96 ரூபாவாகவும் சம்பா ஒரு கிலோ 98 ரூபாவாகவும் விற்பனை செய்வதற்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யப்படுமாயின், அது குறித்து பிராந்திய மற்றும் தலைமை காரியாலயத்திற்கு அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.