ஹரித தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பம்

ஹரித தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

31 Mar, 2021 | 4:44 pm

Colombo (News 1st) ஹரித TV என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி அலைவரிசை இன்று ஆரம்பிக்கப்பட்டது.

ஹுனுப்பிட்டிய – கங்காராம விகாரையில் இயங்கும் ஶ்ரீ ஜினரத்ன கல்வி நிறுவகத்தின் நிர்வாக சபையினரால் இந்த தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஹரித தொலைக்காட்சி அலைவரிசையின் அங்குரார்ப்பண நிகழ்வில் மகா சங்கத்தினர், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

விவசாய தகவல்கள் உள்ளிட்ட எதிர்கால சௌபாக்கிய திட்டம் தொடர்பில் மக்களை தௌிவுபடுத்தும் நோக்கில் இந்த புதிய அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்