யாழ். மாவட்டத்தில் மார்ச்சில் மாத்திரம் 536 பேருக்கு கொரோனா தொற்று

யாழ். மாவட்டத்தில் மார்ச்சில் மாத்திரம் 536 பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Bella Dalima

31 Mar, 2021 | 9:01 pm

Colombo (News 1st) யாழ். மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் மாத்திரம் 536 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இன்று (31) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

கடந்த ஞாயிறு, திங்கள் கிழமைகளில் வர்த்தக நிலையங்கள், சந்தைத் தொகுதிகளில் பணியாற்றுவோருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.

இதன்போது 1440 பேரிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருந்ததாகவும் பரிசோதனை முடிவில் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்