மோசடியான முறையில் பண பரிமாற்றம்;யாழில் ஒருவர் கைது

மோசடியான முறையில் பண பரிமாற்றம்; சாவகச்சேரியில் ஒருவர் கைது

by Bella Dalima 31-03-2021 | 3:39 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் நிதி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 41 வயதான ஆண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். சந்தேகநபரின் தனியார் வங்கிக் கணக்கொன்றில் 1,34,23,179 ரூபா பணம் வௌிநாட்டிலிருந்து வைப்பிலிடப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன கூறினார். மோசடியான முறையில் குறித்த பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்கள் சிலர் அங்குள்ளவர்களின் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி, சட்டவிரோதமான முறையில் சந்தேகநபரின் கணக்கிற்கு பணத்தை அனுப்பியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வௌிநாட்டு வங்கிக் கணக்குகளிலிருந்து சட்டவிரோதமாக பண பரிமாற்றத்தில் ஈடுபடும் 30 பேர் இதுவரையில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து குற்றப்புலனாய்வு பிரிவினர் விசேட விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.